Best Birthday Wishes சிறந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழில்

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

By admin

Updated on:

Best Birthday Wishes சிறந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழில்

Best Birthday Wishes in Tamil பிறந்த நாள் வாழ்த்துக்கள்  வருடத்தில் ஒரு நாள் மட்டும் அனைவருக்கும் வரக்கூடிய மிக சிறப்பான நாளாக கருதப்படுவது பிறந்தநாள் தான். அந்த பிறந்தநாளில் உங்களுக்கு அன்புக்குரியவர்களுக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் பொழுது அதில் வரும் சந்தோஷம் தனி.

உங்கள் அன்புக்குரியவர்களின் பிறந்தநாளை தமிழில் வாழ்த்தி உங்களுடைய அன்பையும், மகிழ்ச்சியையும் அவருக்கு வாழ்த்தாக அர்ப்பணிக்கலாம்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்-birthday kavithai in tamil

pirantha naal valthukkal
pirantha naal valthukkal

இந்த நாள் மட்டுமல்லாமல் இனிவரும் வருடத்தில் எல்லா நாளும் உங்களுக்கு சிறந்த நாளாகவும், மகிழ்ச்சி தரக்கூடிய நாளாகவும் ஒவ்வொரு நாளும் கொண்டாட வேண்டும் என மனமாற வாழ்த்துகிறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

ஏன் நண்பரே, நீ என் வாழ்நாளில் இல்லாமல் இருந்தால் என்னுடைய வாழ்க்கை எந்த அளவிற்கு மாறிவிட்டிருக்கும் என்பது கனவில் கூட பார்க்க முடியவில்லை, என் வாழ்க்கை மாற்றிய உனக்கு என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

உங்களுடைய பிறந்தநாள் மிகவும் அற்புதமாகவும், உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாட என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

எல்லா இடங்களிலும் நேர்மையான எண்ணங்கள், மற்றவர்களுக்கு உதவி செய்யும் உள்ளம், நம்பிக்கையூட்டும் பேச்சு போன்றவை கொண்ட உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

வருடத்தில் 365 நாட்களும் மற்றொருவர்களுக்காக ஓடி உழைத்து கொண்டிருக்கும் உங்களுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து சந்தோஷமும், புத்துணர்ச்சியும் கொண்ட புதிய வாழ்க்கையை ஆரம்பித்து வெற்றி பெற என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

என் பிறந்தநாளை விட உன்னுடைய பிறந்த நாளில் தான் நான் உன்ன விட மகிழ்ச்சியாக உள்ளேன், ஏனோ தெரியவில்லை உனக்கும் எனக்கும் இருக்கும் பந்தம் இது வாழ்வில் கடைசி வரை இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன் என் அன்பான உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

pirantha naal valthukkal
pirantha naal valthukkal

 

நான் அறிந்த இனிமையான மனிதருக்கு இன்று பிறந்தநாள். நீங்கள் மட்டுமல்லாமல் உங்கள் குடும்பமும் மகிழ்ச்சியோடு உங்கள் கனவுகள் வாக கூடிய விரைவில் நிறைவேற என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், இந்த நாள் உங்களுக்கு அற்புதமான நாளாக அமையட்டும், ஆசிர்வாதமும் அன்பும் பக்கபலமாய் கொண்ட உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

நீ என் நண்பனாக கிடைக்க நான் என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை, நீ இல்லாமல் என் வாழ்க்கை நிச்சயம் இல்லை, அந்த வாழ்க்கை என்னால் கனவில் கூட காண முடியாது. இந்த ஒரு வாழ்க்கையை கொடுத்த உனக்கு என் இனிய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே.

 

இந்த இனிய நாளில் உங்களுடைய கண்ணீர், அழுகை, துன்பம் விலகி மகிழ்ச்சியாக தருணத்தை இந்த ஒரு நொடி முதல் உங்கள் வாழ்க்கைக்கு வர வழி வகுங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

இன்றைய தினம் நீங்கள் எது நினைத்தாலும், நீங்கள் எதை ஆசைப்பட்டாலும், நீங்கள் எதுக்கு விருப்பப்பட்டாலும், நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேற இந்த நாள் முதல் புதிய வாழ்க்கையை தொடங்க என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

pirantha naal valthukkal
pirantha naal valthukkal

என்னை எப்பொழுதும் உற்சாகத்துடன் வழிநடத்தும், உயர்ந்த மனிதருக்கு இன்றைய பிறந்தநாள் வாழ்த்துக்களை நான் சொல்ல மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

 

மறக்க முடியாத நினைவுகளும், முடிவில்லாத சிரிப்புகளும், உயர்ந்து கொண்டே போகும் உங்கள் வெற்றியும் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் தொடர என் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

என்னை பற்றி எனக்கே தெரியாத சில விஷயங்களை தெரிய வைத்து, என் வாழ்க்கையில் மிகப் பெரிய ஒரு ஒளியாய் இன்று வரை பிரதமளிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

ஒவ்வொரு நொடியையும் எனக்கான நொடியாக மாற்றி, என் வெற்றிக்கு வழி வகுத்த நான் கடவுளாக மதிக்கும் நபருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

அதேபோல் மீண்டும் மகிழ்ச்சி, அதே போல் மீண்டும் வெற்றி, அதே போல் மீண்டும் சிரிப்பு, போன்றவை மற்றும் கடந்த வருடத்தை போல இந்த வருடமும் உங்களை தொடர இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

இந்த நாள் போல இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு வெற்றிகையும் மகிழ்ச்சியும் மட்டும் நாளாக இருக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

 

அன்போடும் பாசத்தோடும் என்னை பார்த்துக் கொண்டு உறவுக்கு இன்றைய தினம் போல் வருடம் தோறும் மகிழ்ச்சியாக வாழ என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

உதடுகள் சிரிப்பால் சிவரட்டும், உள்ளம் மகிழ்ச்சியால் குளிரட்டும் உனக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

 என்னுள் பாதியாகவும், எண்ணத்தில் மீதியாகவும் வாழ்க்கைக்கு துணைவியாக இருக்கும் உனக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

admin

Leave a Comment