love kavithai tamil எத்தனை மொழி இருந்தாலும் தமிழ் மொழியில் காதலிக்கோ/காதலனுக்கும் கவிதை முறையில் வர்ணிப்பது மேலும் உங்களை மேம்படுத்தும்.
காதல் கவிதை (Kathal Love Kavithai )
உன் உதடு பார்த்து பேசிய நாட்களை விட, உன் கண்களால் பேசும் வார்த்தையை தான் நான் மிகவும் அதிகமாக காதலிக்கிறேன்.
என்னதான் உன்னை நேரில் பார்த்து பேசினாலும், உன் முகம் காணாமல் குரலை மட்டும் கேட்கும் அன்பு தருணத்தை தான் நான் மிகவும் விரும்புகிறேன்.
காதலுக்கும் மூன்றெழுத்து உயிருக்கும் மூன்றெழுத்து பெண்ணே உன்னை உயிரைவிட மேலாகும் காதலுக்கும் எனக்கு நீ மட்டும் தான் உயிர் மூச்சு.
உன்னை என் மனம் ஏற்கவும் மறுக்கிறது சில நேரங்களில் உன்னை மறக்கவும் மறுக்கிறது இப்படி ஒரு கஷ்டமான தருணத்தை என் பெண்ணே எனக்கு கொடுத்தாய்.

நான் பல பெண்களின் பார்த்து இருக்கிறேன், ஆனால் உன்னை பார்க்கும் பொழுது மட்டும் தான் ஏனோ ஒரு சில மாற்றம் என் உள்ளத்தில் தோன்றுகிறது.
காதலியாக நீ இருந்தால் கல்லறைக்கும் செல்லவும் நான் தயார்.
காதல் எனும் பயணத்தை தொடங்கி கல்யாணம் என வாழ்க்கையை பிடிக்க என்னுடன் வருவாயா பெண்ணே.
கடந்த ஒரு ஜென்மத்தில் நான் என்ன ஒரு புண்ணியம் செய்திருப்பேனோ தெரியவில்லை நீ என் அன்பு காதலியாக வருவதற்கு.

எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், பெண்ணே உன்னுடைய ஞாபகம் கஷ்டங்களுக்கு மருந்தாக உள்ளது.
ஆயிரம் பேர் கூட இருந்தாலும், நீ இல்லாத ஒரு நொடி கூட என் வாழ்க்கை நரகமாக தான் போகும்.
நெடு தூரம் பயணம் இல்லை, நேர கணக்கில் பேச்சியில்லை, இரவு முழுவதும் காமம் இல்லை இருந்தாலும் இந்த உலகில் என்ன விலை உன்னை காதலிக்க எவரும் இல்லை.
என் இதயத்தில் கனவுகள் இருக்கும் வரை கற்பனைக்கு இடம் இல்லை, உன் நினைவுகள் இருக்கும் வரை என் நிம்மதிக்கு இடமில்லை.
உன்னுடன் பேசிய சில நாட்கள் போதும் உன் நினைவாலே என் உயிர் வாழும்.
நான் உண்டு என் வேலை உண்டு என இருந்த என் வாழ்க்கையை, ஏன் வந்தாய் எதிர்ப்பு வந்தாய் தெரியவில்லை என் மனதிற்கு நுழைந்தாய், சரி இதுதான் வாழ்க்கையே என நினைத்து உன்னை மட்டும் தான் உயிராக மதித்தேன். ஆனால் இப்பொழுது ஏன் என்னை விட்டு செல்கின்றாய் எதற்கு சென்றாய் என்பது தெரியாமலே புலம்பி கொண்டிருக்கிறேன்.

கண்டிப்பாக உன்னை எண்ணி நான் தவிப்பேன் என எண்ணியும் ஏன் என்னை விட்டு சென்றாய்.
எந்த ஒரு உறவையும் பிடித்திருப்பதற்கு சில காரணங்கள் இருக்கும், ஆனால் உன்னை பிடித்ததற்கு தெரியாமல் அலைகிறேன்.
நீ சிரித்தாய் நானும் சிரித்தேன், நீ அழுதால் நானும் அழுவேன் நீ என்னை விட்டு சென்ற பிறகும் என் மனம் உன்னை விட்டு செல்ல தடுக்கிறது.
எல்லா உறவுகளும் நம்முடன் இருந்து சில காரணங்களுக்குப் பிறகு சென்றுவிடும், ஆனால் சில உறவுகள் மட்டும்தான் எந்த ஒரு காரணமும் இல்லாமல் கடைசிவரை நம் வாழ்வில் வரும்.
மனதிற்கு பிடித்த கைகளை நம் பிடிக்கும் பொழுது தான் வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு தன்னம்பிக்கையுடன் வாழ்க்கை தொடங்க மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் மனம் மாறும்.
ஒரே ஒரு உறவாக இருந்தாலும் உறுதுணையாக வேண்டும்.
Also Read More :திருமண வாழ்த்துக்கள் கவிதை | கல்யாண வாழ்த்து wedding wishes Tamil