அம்மா நா யாருக்கு தான் பிடிக்காது. அப்படி நம்மை பத்து மாதம் சுமந்து பெற்று நமக்கு வேண்டியதை அனைத்தும் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்து, கண் கண்ட தெய்வமாக இருக்கும் தாயிருக்கான சிறந்த கவிதைகள்.
ஒரு பொழுதும் நாம் எந்த ஒரு சூழ்நிலையில் இருக்கும் பொழுதும். நம்மை சிறுவயது முதல் இன்றைய தேதி வரையில் பார்த்துக் கொண்ட அம்மாவை முடிந்தவரையில் மனது நோகடிக்காமல், அவர்களுக்கு பணிவிடை செய்து, கடைசி காலங்களில் பத்திரமாக பார்த்துக் கொள்வது தான் தாயைப் பெற்ற உனக்கு பெருமை.. அம்மா இல்லாதவர்கள் தான் அதன் வலி தெரியும்.Amma Kavithigal, Amma Love Kavithai.
அம்மா கவிதைகள்-amma kavithai in tamil

மீண்டும் மழலை ஆனேன் அம்மாவின் புடவை போர்த்திய பொழுது.
பத்து நிமிடம் கூட என்னால் வயிற்று வலியை தாங்க முடியல, ஆனால் என் தாய் என்னை பத்து மாதம் சுமந்து எப்படி தான் பெற்றெடுத்தாலும் என் தாயிருக்கும் முதல் கண் வணக்கம்.
அன்பு காட்ட ஆயிரம் பேர் இருந்தாலும் உன்னை போல் யாரும் இல்ல தாயே.
வழி சொல்ல யாரும் இல்லை, விழி பிதுங்கி நிக்குறேன் தனிமையில, ஏமா என்னை மட்டும் தனியா விட்டுட்டு நீ மட்டும் போயிட்ட கல்லறையில
சிலருக்கு இருக்கும்போது அலட்சியமாகவும், இல்லாத போது அன்ப பொழிய தேடுபவர்களாகவும் தான் தாய் இருக்கிறாள்.

ஆயிரம் முறை தோற்றாலும் அம்மா உன் முகம் போதும் அடுத்த முறை வெல்ல.
அம்மாக்கு என்று தனியாக கவிதை வேண்டாம், அவள் அன்பை புரிந்து கொள் வாழ்க்கையை கவிதையாக மாறும்.
உணவை தட்டில் வைத்து மிரட்டுவது அவள் தான், உறங்கும்போது அணைப்பதும் அவள்தான்.
எவ்வளவு கத்தி அழுதாலும் சரி புரண்டாலும் சரி மீண்டும் வராத ஒரே ஒரு வாழ்க்கை அம்மா அப்பா உடன் வாழ்ந்த வாழ்க்கைதான்.

ஆயிரம் உறவாய் சேர்ந்து ஒரு உருவாய் கிடைத்த வரம் தான் என் தாய்.
இன்பம் துன்பம் எது வந்த போதிலும் தன்னைவிட தன் குழந்தையை பாதுகாப்பது தான் தாய்.
அம்மா உன் கையில் இருக்கும் வரை எனக்கு இந்த உலகம் தெரியவில்லை, நீ இல்லாத இந்த நாட்களில் தான் உலகம் எப்படி இருக்கிறது என்பதை எனக்கு தெரிய வருகிறது.
பத்து மாதம் சுமந்த என்னை, ஒரு முறையாவது உன்னை சுமக்க நான் ஆசைப்படுகிறேன் அம்மா.