இப்படி தான் தூங்கறீங்களா? உங்கள் உடம்புக்கு இது பெரிய ஆபத்து

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

By admin

Published on:

தூக்கமென்பது ஒரு மனிதனுக்கு அன்றாட நடக்கக்கூடிய முக்கியமான ஒரு வேலை. ஆனால் இந்த வேலையினால் நமக்கு சில ஆபத்துகள் ஏற்படும் என்றால் கண்டிப்பாக அதை நாம் சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இது உங்கள் வாழ்க்கையே மாற்றிவிடலாம். தூக்கம் மனநிலை, உடல்நிலை மற்றும் உயிரான சுழற்சி போன்றவருக்கு மிகப்பெரிய தாக்கம் செய்யும் ஆனால் இந்த பழக்கங்கள் இருந்தால் அது இன்றையோடு விட்டு விடுங்கள்.

மொபைல் பார்த்தபடியே தூங்குவது

இன்று காலகட்டத்தில் மொபைலை நாம் பயன்படுத்துவதில்லை மொபைல் தான் நம்மளை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது. பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய ஒரு பிரச்சனை இரவு நேரங்களில் ஸ்மார்ட் ஃபோன்களை அதிக நேரம் பயன்படுத்திக் கொண்டிருப்பது தான். அல்லது டிவி பார்த்து கொண்டே தூங்குவது இதன் மூலமாக நம் கண்களில் டிவி அல்லது ஸ்மார்ட் போன் மூலமாக ப்ளூ லைட் உங்களுடைய melatonin ப்ரொடக்ஷனை குறைக்கும்.

  • கண் சோர்வு
  • தூக்கம் இழப்பது
  • மன அழுத்தம் அதிகரிப்பு

இது காலப்போக்கில் நமக்கு ஒரு ஹாப்பி டாகை மாறிவிடும். இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறைந்தபட்சம் தூங்குறதுக்கு அரை மணி நேரம் முன்பு ஸ்மார்ட் போன் அல்லது டிவி லேப்டாப் போன்றவற்றில் வார்ம் லைட் பயன்படுத்துவது சிறந்தது.

நேரம் தவறுதல்

late night sleep problem in tamil
late night sleep problem in tamil

நேரம் என்பது தூக்கத்திற்கும் முக்கியமானது தான். அதாவது சில நேரங்களில் சில நாட்களை நாம் 10 மணிக்கு தூங்கி விடுவோம். இதுவே சில நேரங்களில் அல்லது வாரத்தின் கடைசி நாட்களில் மூவி, பார்ட்டி போன்றவற்றின் மூலமாக 12 மணிக்கு தூங்குவது வழக்கம் இது அப்படியே தொடரும் பொழுது டிப்ரசனுக்கு , நோய் எதிர்ப்பு  , மனநிலை போன்ற நிலைமைக்கு  செல்லும். குறைந்தபட்சம் தினந்தோறும் ஏதேனும் ஒரு நேரத்தை  fix செய்ய வேண்டும். 10.30 PM to 5.30AM.

இரவு நேர ஸ்நாக்ஸ்
unhealth sleeping in tamil
unhealth sleeping in tamil

பலரும் இரவு நேரத்தில் netflix, smartphonre, TV படம் பார்த்துக்கொண்டு அல்லது ஸ்மார்ட் போன் பயன்படுத்திக் கொண்டு அதிக கொழுப்பு கொண்ட ஸ்னாக்ஸ் களை சாப்பிடுவது, சிப்ஸ், எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள், பிரியாணி இவற்றை இரவு நேரங்களில் சாப்பிடுவது எடை அதிகரிக்கவும் வழி வகுக்கும். அது மட்டுமல்லாமல் அமிலக் கொழுப்பு சுரக்க வேண்டிய enzyms சுரக்க வேண்டியது டிஸ்டப் ஆகும். அதனால் குறைந்த பட்சம் இரவு நேரத்தில் 7:30 to 8.30 PM dinner முடித்துக் கொள்ள வேண்டும்.

ஓவர் திங்கிங்

இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஒரு பிரச்சனை என்றால் ஓவர் திங்கிங். இது அதிகமானால் மனிதநேய கொன்றுவிடும். குறிப்பாக வேலை, குடும்ப பிரச்சனை, காதல் பிரச்சனை, திருமண பிரச்சனை போன்றவற்றை நினைத்து அதிகமாக ஓவர் திங்கிங் செய்து உடலை கெடுத்துக் கொள்கின்றன. இதனால் தீங்கு விளைவிக்கும் கனவுகள் வருவதற்கும் தூக்கம் வராமல் அவதிப்படுவதற்கும் இதனால் மனநிலை பெரிதும் பாதிக்கப்படும்.

deep Room

பொதுவாக சிலருக்கு இரவு நேரத்தில் தூங்கும் பெட்ரூமில் லைட் இல்லாமல் தூங்குவது கிடையாது. இது மிகப்பெரிய ஒரு ஆபத்தை ஏற்படுத்தும். குறிப்பாக குழந்தைகளுக்கும். அதனால் முடிந்த வரையில் தூங்கும் இப்போது எந்த விதமான வெளிச்சம் இல்லாமல் இருப்பது அவசியம். அல்லது Eye Mask தூங்குவதும் நல்லது தான்.

ஒரு வேலை வெளிச்சம் இருந்து ம் பொழுது, காலை எழுந்தாலும் உடலும் சரி மணமும் சரி சரியான உற்சாகம் இல்லாமல் இருப்பதற்கும் காரணமாக அமையும். இதனால் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் தூங்க பழகிக் கொள்ளுங்கள்.

தூக்கம் என்பது டைம் வேஸ்ட் கிடையாது. அது உங்களுடைய உடலை அடுத்த நாளுக்கு வழி நடத்திச் செல்லக்கூடிய ஒரு வழி. நாள் முடிந்த வரியில் மேலே கூறப்பட்டுள்ள ஐந்து வழிமுறைகளை பயன்படுத்தி தூங்க பழகிக் கொள்ளுங்கள் இது உங்களுக்கும் உங்கள் மனநிலைக்கு ஏற்றது.

சாப்பாடு வேண்டாம், கஞ்சி போதும்-Diet இருக்கிறவங்க பார்த்தே ஆகணும்

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

admin

1 thought on “இப்படி தான் தூங்கறீங்களா? உங்கள் உடம்புக்கு இது பெரிய ஆபத்து”

  1. இரவு தூக்கத்தை பலர் கெடுத்துக் கொண்டு மொபைல் பார்ப்பதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர்! இதனால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன! சரியான நேரத்துக்கு தூங்குவதை வழக்கமாக்கிக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும்!”

    Reply

Leave a Comment