ஆடி மாதம் என்பது தமிழ் நாள்காட்டில் மிகவும் முக்கியமான ஆன்மீக மாதமாகும். சித்திரை மாதத்தில் இருந்து நான்காவது மாதமாக ஆடி மாதம் அமைந்துள்ளது இந்த ஆடி மாதம் 2025 ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முடிகிறது. இதில் ஆன்மீக மாதமாக இருக்கும் பட்சத்தில் நாம் இந்த ஆடி மாதத்தில் மிக முக்கியமான நாட்கள் மட்டும் வழிபட வேண்டிய கடவுள்களை பற்றி பார்க்கலாம்.
அதேபோல் ஆடி மாதம் என்பது சினிமா நாடகம் கிராமிய கலாச்சாரங்களில் கூட தனிப்பெரும் இடத்தை பெற்றுள்ளது. ஆடி மாதத்தில் எந்த விதமான நல்ல விஷயங்களையும் அல்லது நல்ல சுப காரியங்களையும் செய்வது அரிது.
ஆடி கிருத்திகை 2025 இந்த நாளில் இந்த ஐந்து விஷயங்கள் கண்டிப்பா செய்யணும்
ஆடி மாசம் முக்கிய நாட்கள்
ஆடி மாதம் தொடக்கம் | ஜூலை 17 |
ஆடி பௌர்ணமி | ஜூலை 21 |
ஆடி அமாவாசை | ஆகஸ்ட் 4 |
ஆடிப்பெருக்கு | ஆகஸ்ட் 3 |
ஆடி செவ்வாய் | ஜூலை 29 26 மற்றும் ஆகஸ்ட் 12 |
ஆடி வெள்ளி | ஜூலை 18,25 ஆகஸ்ட் 1.8,15 |
ஆடி கிருத்திகை | ஆகஸ்ட் 8 |
வரட்சிய விரதம் | ஆகஸ்ட் 8 |
ஆடி முடிவு | ஆகஸ்ட் 16 |
வழிபட வேண்டிய கடவுள்கள்
- பராசக்தி அம்மன்-ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதமாகும்
- துர்கை அம்மன்-தீமைகளை அழிக்க குடும்பத்தில் அமைதியை நிலை நாட்ட
- முருகன்-நவராத்திரிக்கு முன் சத்திய ஞானத்தையும் பெற
- கங்கை மாதா-ஆடிப்பெருக்கு நேரங்களில் நதிகளில் கங்கை வழிபாடு முக்கியம்.
- வரலட்சுமி தேவி-குடும்ப நலன் மற்றும் ஐஸ்வரியம்
- பித்ருக்கள்-ஆடி அமாவாசைக்கு முன்னோர்கள் தர்ப்பணம்.