மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஒரு ஆணுக்கு அவருடைய வாழ்நாளில் முக்கியமான தருணத்தை, மகிழ்ச்சியான நிமிடத்தையும் தன் ஆண் என்பதை நிரூபித்து தன்னைவிட தன் குடும்பத்தை அன்போடும் சந்தோஷத்தோடும் வைத்திருக்கும் அன்பான மனைவிக்கு பிறந்தநாள் அன்று இனிமையான தமிழ் முறையில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவியுங்கள்.
பெண் என்பவள் புகுந்த வீட்டிற்கு வரும்பொழுது பிறந்த வீட்டு பெருமையும், புகுந்த வீட்டு பெருமையும் ஒன்று சேர்த்து குடும்பத்தை மகிழ்ச்சியுடனும், தன் கணவனையும் அரவணைத்து குடும்பத்தை நடத்தும் பெண்ணுக்கு அதாவது மனைவிக்கு அவர் பிறந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடும் நாளாக வாழ்த்துக்களை தெரிவிங்க.
மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் Wife Birthday Wishes
என் வாழ்நாளில் எதிர்பார்த்து பல சந்தோஷங்கள் கிடைத்ததில்லை, ஆனால் எதிர்பார்க்காத சந்தோஷம் என்றால் அது நீதான் உனக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என் வாழ்க்கையில் பாதியாகும், எண்ணத்தை மீதியாகவும், என் செயல்களில் வழிகாட்டியாக இருந்து, நல்வழிப்படுத்தும் என் உயிருக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என் தாய் தந்தையை விட, என் மேல் அதிக பாசமும் அக்கறையும் தன்னம்பிக்கை கொண்ட என் அன்பு பொண்டாட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நான் கடவுளுடன் வேண்டுகிறேன், அடுத்த ஜென்மத்தில் நான் உனக்கு மனைவியாக இருக்க வேண்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என் வாழ்க்கைக்கு கிடைத்த பரிசுக்கு இன்று பிறந்தநாள்.

சிறப்பான இந்த நாள் முதல் என் வாழ்க்கைக்கு வரும் அனைத்து சந்தோஷங்களையும் உன்னிடம் பகிர விரும்புகிறேன் மனைவியே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சில நேரங்களில் கோபம் மட்டும் தான் உங்களிடம் தோன்றும், ஆனால் அது வெறும் ஐந்து நிமிடங்கள் தான் உன்னை விட என்னை யாரும் கோபப்படுத்தியது இல்லை, உன்னை விட என்னை யாரும் சந்தோஷப்படுத்த எதுவும் இல்லை உன் அன்புக்கு என்றும் நான் அடிமை தான் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நான் தோன்றியிருக்கும் பொழுது எனக்கு தூணாகவும், நாம் மகிழ்ச்சியில் சொல்லும் பொழுது சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கும் என் அன்பு மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உன் முகம் பார்த்து வாழ்த்த முடியாத சூழ்நிலையால் தவிக்கிறேன், கூடிய விரைவில் உன்னை காண வருவேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என் மனைவி மட்டுமல்லாமல் என் வாழ்க்கையை நெறிப்படுத்தி, ஒழுங்குப்படுத்தி தோற்றுப் போய் நின்ற என்னை , துவண்டு விடாமல் துணாக மாற்றி குடும்பம் எனும் கோவிலை மற்றவர்கள் பார்க்கும்படி செய்து மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும் தெய்வத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஒருவேளை உனக்காக நான் வேண்டுகிறேன் கடவுளிடம் இந்த ஜென்மம் மட்டுமல்லாமல் இன்னும் பல ஜென்மங்களும் நீ எனக்கு மனைவியாக இருக்க வேண்டும் என இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என் தாய் தந்தைக்கு பிறகு என்னை அவர்களை விட அன்பாகவும், பாசமாகவும், மகிழ்ச்சியாக இருக்க வைத்த உயிர் நீதான், என் உயிரே உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நீ பார்க்கும் ஒரு பார்வை போதும் ஓராயிரம் கவிதைகள் சொல்லும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பிரிவு என்ற வந்த பொழுது தான் உன்னை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை எனக்கு தெரிய வந்தது, இது ஒரு பொழுதும் நீடித்து விடாது. கூடிய விரைவில் நம் ஒன்று சேர்வோம் உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இந்த உலகில் நான்தான் சிறந்த சேகரிப்பாளர், உன்னுடைய நினைவுகள், உன்னுடைய குறும்புகள், உன்னுடைய சண்டைகள், சமாதானங்கள் இவை அனைத்தும் மனம் என்ற பெட்டியில் சேகரித்து வைத்துள்ளேன். துவண்டு போயிருக்கும் பொழுது மனம் என்ற பெட்டியை பார்க்கும் பொழுது தான் நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என தெரிகிறது என் அன்பு மனைவியே… இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
எவ்வளவு வாசனை திரவங்கள் இந்த உலகில் இருந்தாலும் என்னை கட்டி இழுத்த வாசனை என்றால் அதுவும் உடலின் வாசம்தான் பெண்ணே உனக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஒரு வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூவை விட, வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் உன் பிறந்தநாளுக்கு காத்திருக்கிறேன் . இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இறைவன் தந்த எனக்கான வரம் தான் என் மனைவியாக நீ, உன்னை நான் என் வாழ்வில் கிடைக்கப்பெற்றது எந்த ஜென்மத்தில் நான் செய்த புண்ணியம் செய்யவில்லை பொண்டாட்டி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மனைவியாக மட்டுமல்லாமல், என் இன்ப துன்பங்கள் அனைத்தும் பங்கு பெற்று, நல்லது கெட்டதை தெளிவுபடுத்தி, வாழ்க்கையை புரிய வைத்த எனக்கு பிடித்த பெண்மணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என்னை என்னை விட உண்மையாக காதலிப்பதை உந்தன் மனம் தான் பெண்ணே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.