மனைவி-இடையிலான இதயத்தை வருடும் காதல் கவிதை Husband Wife Love Kavithai in Tamil

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

By admin

Updated on:

husband-and-wife-quotes-in-tamil

வெள்ளை அணுவும்,

சிவப்பு அணுவும்,

ஒன்றாக இருந்தால் தானே,

அது இரத்தம்,

 

நீயும்,நானும்,

ஒன்றாக இருந்தால் தானே,

அது காதல்

 

தூக்கமில்லா கனவுகள்,

உன்னோடு பழகிய நாட்கள்.

 

 

love quotes in tamil for husband
love quotes in tamil for husband

 

எல்லோரும் பெண்களை தான்
பூக்கள்
என்கிறார்கள்…
ஆனால்
வாடுவது என்னமோ
ஆண்கள் மட்டும் தான்

 

கண்களை மூடினால் வரும்
கனவுகளை விட
கண்களை திறந்திருந்தால் வரும்
உன் நினைவுகள் தான்
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ……..

 

husband and wife love quotes in tamil
husband and wife love quotes in tamil

 

உன்னோடு சேர்ந்து வாழவில்லை என்பதற்காய்
என் காதல் தோற்றுப்போய் விட்டதென்று அர்த்தமில்லை…
சேர்வது மட்டுமே காதலென்றால்….,
காதல் எப்போதோ சுவடின்றி அழிந்து போயிருக்கும்..

 

படுக்கை விரித்து போட்டேன்….
அதில் முள்ளாய் அவள் நினைவு..

 

இது வரைக்கும் – என்
கைகள் கூட பட்டதில்லை
உன் மீது..
ஆனால்
என் கவிதைகள் பட்டிருக்கும்
உன் இதழ் மீது

 

 

அங்கங்கே மறந்து வைக்கப்பட்டு தேடும்
சாவி பேனா செல்போன் போல
நினைவுகளையும் எங்காவது
மறந்து வைக்க முடிந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும் …

 

husband and wife quotes in tamil
husband and wife quotes in tamil

 

நீ அங்கு நான் இங்கு
நம் இதயங்களில் நாம் ஒன்று

 

வேறேதும் தேவையில்லை..
ஒரு முறை.. ஒரே முறை..
அவள் நிழல் அருகே
என் நிழல் தோன்ற
ஏங்கின்றேன்…

 

காதல் விளையாட்டு
இருவருக்குமே வெற்றி என்பதெனில்
எனக்கும் சந்தோஷம் தான்.
நீ மட்டுமே வெற்றி பெறுவதானாலும்
நான் தோற்று போக கூட
சித்தமாயிருக்கிறேன்.
ஆனால்,
இருவருமே தோற்று போவோம்
என தெரிந்த பின்னும்
ஏனடி இந்த காதல் விளையாட்டு.

 

எதுவாக இருந்தாலும் உன்னை மன்னிப்பேன்
எனக்காய் நீ இருக்கும் வரை …!!!

 

இந்த நொடியாவது சற்று அயர்ந்து
கண் உறங்கடி என் தோள் மீது.
அந்த சில நொடிகள் போதும்
என் காதல் முழுவதுமாய் பயணித்து விடும்
நீ இல்லாத நாட்களில் கூட…….

 

“உன்னை மட்டுமே நினைக்க வேண்டுமென்று
என்னை நினைக்கவே நான் மறந்து விட்டேன்”
உன் நினைவுகள் இல்லாமல் நான் இல்லை !!!
நீயே என் நினைவுகளாய் …
என்னை நினைப்பதும்
உன்னை நினைப்பதும்ஒன்று தானே !

 

 

நீ திட்டினால் நான் கோபப்படுவதில்லை…
நீ அடித்தால் நான் அழுவதில்லை….
ஆனால் மெளனமாக மட்டும் இருந்து விடாதே
என்னை மரணம் கூப்பிடுவதாய் உணர்கிறேன்….

 

 

வாடிப்போன மனம்
துவளாமல் வாழ்கிறது
தூபம் போடும் உன்
நினைவுகளால் இன்னும்…

 

 

மறுக்க முடியாமல்
மறக்க இயலாமல்
மனதோடு போராடும் உன்
மறையாத ஞாபகங்கள்
மகிழ்ந்த படி எந்நாளும்..

 

கருவாச்சி …
என்மேல என்ன கோவம் சொல்லு..?
வழி கோடி
நடக்க வழி இல்ல…
இரவு நேரத்துல என்ன கொல்லி வச்சு போறவளே..
திட்டி அணைக்க வருவாயா…?

 

 

கருப்பு மாடத்துல
கட்டெறும்பு நிக்கையிலே ..,
அகழின் ஒளிச்சுடரில்
… ஒய்யாரமாய் நின்னவளே…
நாம போட்ட விடு கதை
நமக்கே வில்லங்கமா போச்சு புள்ள…

 

 

என் வீட்டு வாசலிலே
பூத்த ரோஜா
கைக்கு எட்ட வழியில்லையே ..,
கண்ணா கலங்க வச்சு
பன்னீரில் மிதந்தவளே…
கரும்புக்காடு கூட்டத்துல
நெல்லுக்கொரு வாசம் இல்ல..

 

மஞ்ச கிழங்கெடுக்க
மண் வாசன செஞ்சவளே .,
நெஞ்சில் கரை பிடிக்க
வாழ தாரை நெய்ஞ்சவளே..
இப்போ என்ன தூக்கி எரிஞ்சி போறாளே……..!

 

விழிகள் என்னும் தொழிற்சாலையில்
தயாரிக்கப்படும்
மயக்க மருந்து …
கண்களால் விற்கப்படும்
… கஞ்சாத்தூள்..
விற்பவள் சந்தோசத்தில்
வாங்கியவன் தெருவோரத்தில்….

 

 

என் ஆசை காதலுக்காக காதல் வரிகள் love kavithai tamil lyrics

 

அன்பே..
உன்னை காணும் நாளை
எண்ணி தினம் ஏங்கினேன்….
போகின்ற வழியில்
கண் பார்க்கும் இடம் எங்கும் நீதான்..
உன் முகம் என் மனதில்
… ஆழமாய் பதிந்ததால்
விடியும் வரை கனவினில்
நானிங்கு தனியாக அழுகின்றேன்..
தினமும் கனவில் மட்டும் வருகிறாய்
நேரில் வர மறுப்பது ஏனோ..?

 

 

 

Join WhatsApp Channel
More Wishes • Join Now
FREE
VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

admin

Leave a Comment

Join Channel