உங்கள் குடும்ப நபர்கள், நண்பர்கள் , உறவினர்கள், காதலி, மனைவி, கணவருக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவியுங்கள்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்- happy birthday wishes in tamil words
கனவுகளும், ஆசைகளும் எல்லாம் இந்த ஆண்டு மட்டுமல்லாமல் வாழ்நாள் முழுவதும் கிடைக்க என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வானில் தோன்றும் நட்சத்திரங்கள் போல் உன் மகிழ்ச்சி வானுலகமும் முழுவதும் பரவ, ஆசைகளும் ,கனவுகளும் நீ எண்ணியபடி உன்னை பின்தொடர என் இனிய உறவாய் இருக்கும் உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இந்த உலகத்தில் உன்ன விட விலை மதிப்பான ஒரு பொருள் இல்லை, அதனால் உன் பிறந்த நாளிற்கு உன்னையே உனக்கு பரிசாக அளிக்க நான் பாக்கியம் செய்துள்ளேன் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நீ பிறந்த நாள் இன்று உனக்கு மட்டும் பிறந்த நாளாக இல்லாமல் உன் கனவுகளுக்கும், முயற்சிகளுக்கும் தொடக்க நாளாகவும் இருக்க வேண்டும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழரே.
, பிறப்பது ஒரு முறை தான் இறப்பது ஒருமுறைதான் இதற்குள் கிடக்கும் நாம் வெறுப்பு, பொறாமை, கோபம் இல்லாமல் அன்பை மட்டும் மற்றவரிடம் அன்பு செலுத்துவோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பணத்திற்காக ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், உன் அன்பிற்காக என்னை ஏங்க வைத்த உயிர் நீ மட்டும் தான், என் இனிய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ஓ நண்பா, ஒருவேளை நம்மளுடைய நட்பு முன்பே கணித்து தான் திருவள்ளுவர் முகநக நட்பு என்ற திருக்குறளை எழுதியிருப்பாரோ என் நண்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாழ்வில் உனக்கு நிம்மதி, சந்தோஷம் உடல் ஆரோக்கியம் உடன் எப்பொழுதும் 100 வருடம் வாழ என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நீ எப்பொழுதும் நல்ல எண்ணங்களுடன் உடல் ஆரோக்கியத்துடன் மற்றவர்களுக்கு அன்பும் செலுத்தும் உயிராக இருக்க என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மற்றொரு ஜென்மம் இருக்கிறதா என்பது தெரியாது, ஆனால் இந்த ஒரு ஜென்மத்தில் உன்னை போல் என் மேல் அன்பு செலுத்த வேறு எவரும் இல்லை இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இன்றைய தினம் உனக்கு சந்தோஷம், மகிழ்ச்சி, தன்னம்பிக்கையுடன் இந்த பொன்னான நாளை , கனவுடன் எதிர் கொண்டு வெற்றி பெற என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இன்று ஒரு நாளாவது மற்றவர்களுக்காக இல்லாமல் உனக்காகவும் உன் சந்தோஷத்திற்காகவும், உனக்கு பிடித்த விஷயங்களை செய்து உன்னை நீ மகிழ்வித்து பார் இப்படிக்கு என் மனம்.
எவ்வளவு தூரம் பறந்தாலும் கழுகுக்கு கீழே இருக்கும் பாம்பு தென்படும், அதேபோல் நீ எவ்வளவு கஷ்டப்பட்டாலும் உனக்கு கண்டிப்பாக வெற்றி கண்ணில் தென்படும் அதுவரைக்கும் வெற்றியை மற்றும் நோக்கி ஓடிக் கொண்டிரு.
. உனது பிறந்தநாளுக்கு என்னுடைய முதல் வாழ்த்து இல்லாமல் இருந்தாலும், என்னுடைய அன்பும், அக்கறையும் எப்பொழுதும் குறையாது. என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ஆண்டுக்கு ஆண்டு உன்னுடைய வளர்ச்சியும், செழிப்பும் மென்மேலும் வளர, உலகெங்கும் உன்னுடைய பெருமை படற அதைக் கண்டு நான் நெஞ்சம் குளிர இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பணம் போன போக்கில் செல்லாமல், உனக்கான லட்சியம், கனவு, மகிழ்ச்சியுடன் ஆரோக்கியத்தையும் சேர்த்து பயணத்தை பாருங்கள். அதில் உங்கள் வாழ்நாளில் எவ்வளவு சந்தோஷத்தை தரும் என்பது தெரியும் இப்படிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தாய் தந்தையருக்கு பிறகு , என்னை தாய் தந்தையை விட சிறப்பாக பார்த்துக் கொள்ளும் உனக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாழ்நாளில் எல்லா சிறப்புகளும், மகிழ்ச்சியாக கூடி இந்த ஆண்டு மட்டும் இல்லாமல் வருகின்ற உன் வாழ்நாள் முழுவதும் தினந்தோறும் பிறந்த நாளாக நினைத்து அந்த நாளை அனுபவிக்க என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நீ நினைப்பது நனவாகி உன் வாழ்க்கையில் இனிமையாக நிறைந்திருக்க மகிழ்ச்சியாய் வாழ என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உன் வாழ்நாளில் ஒலி மற்றும் ஆனந்தம் பெருக்கெடுத்து அதில் நீ பயணம் செய்ய என் மனமார வாழ்த்துகிறேன்.
Also Read More:இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் iniya piranthanal valthukkal 2024