இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு நபருக்கும் காதல் என்பது கண்டிப்பாக இருக்கும். சிறுவயதில் காதல் என்ற மாய வலையில் விழாத நபர்களை இருக்க முடியாது. அப்படி காதல் என்பது பலருக்கும் சிறந்த வாய்ப்பினையும் வாழ்க்கையும் கொடுத்துள்ளது. ஆனால் சிலருக்கு எதிர்பார்த்த வாழ்க்கை மற்றும் காதலும் கிடைத்ததில்லை.
அப்படி காதலால் பிரிந்து காதலால் வாடும் காதல் தோல்வியால் மனம் உடைந்த நபருக்கு ஏற்றவாறு சில கவிதைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். காதல் மட்டும் தான் வாழ்க்கை அல்ல. காதலை தாண்டியும் காதலை விட சிறந்த வாழ்க்கையும் அமையும். அப்படி காதல் தோல்வியால் இருக்கும் உங்கள் நண்பருக்கு வாட்ஸ் அப், பேஸ்புக், instagram மூலமாக கவிதையே ஷேர் செய்யுங்கள்.
காதல் தோல்வி கவிதைகள்| Love Feeling Kavithai

எதற்கு வந்தாய், ஏன் வந்தாய் மழைக்கால புயல் போல் என் வாழ்வை நொறுக்கி எடுத்து விட்டாய்.
எத்தனை காலங்கள் சென்றாலும் சில விஷயங்கள் மாறாது, அப்படித்தான் உன்மேல் கொண்ட காதலும்.
எனக்கு ஆறுதல் கூறி என் வலிக்கு மருந்தாகவும் இருந்தாய், அதேபோல் எனக்கு வலியாகவும் இருக்கின்றாய்.

ஏனோ உனக்குள் சக்தி இருக்கிறது போல, அரை மணி நேரம் பேசி என் ஆயுள் காலத்தையும் உன்னை மட்டும் நினைக்க வைக்கிறாய்.
சில நேரங்களில் நமக்கு வேண்டாததையும் அன்பு நமக்கு கொடுக்கிறது. அதில் ஒன்றுதான் காதல் வழியும்..
நம் ஒருவரை நேசிக்கும் நபர், நமக்கு மட்டும் உரித்தானவர் அல்ல என்பதை புரிந்து கொண்ட தருணம் இது.

கல்வி பாடத்தை விட காதல் பாடம் நிறையவே வாழ்க்கைக்கு கற்றுக் கொடுத்துள்ளது.
உன் அன்பை நான் நேசித்ததற்கு எனக்கு கொடுத்து விலை தான் காதல் தோல்வி.
சிறந்த உறவுக்கு மூன்று முக்கிய விஷயங்கள் தேவை ஒன்று தண்ணீர். இரண்டு பொய், மூன்று உண்மையான காதல்.

எதிர்பார்க்காமல் வரும் அன்பிற்கும் எல்லை உண்டு என்பதை உன் காதல் தோல்வி நாள் கண்டேன்.
கடைசி வரை அன்பு இருக்காது என்ற இடத்தில் தான் இன்னும் நெருக்கமும் அதிகமாகிறது.
ஒரு இடத்தில் இருந்து கிடைக்கும் அன்பு கடைசி வரை நீடிக்குமா என்ற பயத்திலேயே அந்த அன்பானவர்களின் அன்பை புரிந்து கொள்ளாமலே போய்விடுகிறது.

இந்த வாழ்க்கையில் பல ஏமாற்றங்களையும் கற்றுக் கொண்டேன் உன்னால்.
இனிமே எனக்கு பிடிக்கும் என்பது தான் பொய், தனிமைக்கு என்னை தள்ளப்பட்டன என்பதுதான் உண்மை.
அன்புக்கும் அளவு உள்ளதை என்பதை உன் தோல்வியால் கண்டேன்.
சில நேரங்களில் அதீத அன்பும் ஆபத்தில் தான் முடிந்துள்ளது.

பிடிக்காது என்ற இடத்தில் பலமுறை கெஞ்சினாலும் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
பல நபருக்கு காதல் தோல்வி என அறிவுரை கூறிய எனக்கு, இன்று அதே காதல் தோல்வியால் ஆறுதல் சொல்ல கூட எவரும் இல்லை.
உலகில் விலை மிக்க முடியாத பொருள் என்பதை உன் அன்பு தான் என பலமுறை கூறி, இன்று வெறும் பணத்திற்காக என்னை வெறுத்து ஏமாற்றி விட்டாய் பெண்ணே.
பிரிந்து விட்டோம் என்பது தவறு, பிரிந்து போய்விட்டாய் என்பதுதான் உண்மை.
இலவசமாக கொடுக்கும் பொருளுக்கு கூட சில நிபந்தனைகள் உண்டு, ஆனால் நிபந்தனை இல்லாத அன்பை கொடுத்த எனக்கு மிகப்பெரிய வலியும் கொடுத்தாய்.