காதல் வலி கவிதை Love failure quotes in tamil

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

By admin

Published on:

காதல் வலி கவிதை Love failure quotes in tamil
  • painful love failure quotes in tamil
  • sad love failure quotes in tamil
  • thanimai quotes in tamil
painful love failure quotes in tamil
painful love failure quotes in tamil valthukkal.in

மௌனமாய் இருப்பதால் மறந்து
விட்டேன் என்று நினைக்காதே
மரணதிலும் மறக்க முடியாதது
உந்தன் நினைவுகள்..

தென்னை மரத் தென்றலாய் என் தேகத்தை உலுக்கியது ……
அரைகுறையாய் கலைந்த தூக்கம் ….
நட்சத்திரங்கள் நலம் விசாரித்தன …..
நிலவில் அவள் முகம் ..
என் காதலியாய் தோற்று ..!
இதழ்களாய் உதிர்ந்த உன்னை ….!
என் இதயத்திலேயே புதைத்தது…..நினைவுக்கு எட்டியது….!
வெனிலவே ஆனாலும்-நினைவுகள் போதும் ….!
என்று கண்கள் ஊர்ஜிதப் படுத்த …
இன்றும் தலையனை துணையோடு
துடைத்து கொண்டேன் கண்களை ……..!!!!!!!

மரமாய் நீ
மாறிப்போனாலும்,
நினைவென்ற கொடியாய்
வந்து சுற்றிக்கொள்வேன் உன்னை

தோல்வியும் சுகம் தான் தோறக்கடிப்பது
நீ என்றால். . !
அழுகையும் ஆனந்தம் தான் அரவனைக்க
நீ இருந்தால். . !
தனிமையும் இனிமை தான் நினைவுகளாய்
நீ இருந்தால். . !
கோபமும் கொஞ்சல் தான் கோபம்
நீ கொண்டால். . !

sad love failure quotes in tamil valthukkal.in
sad love failure quotes in tamil valthukkal.in

நீயே எந்தன் கண்ணில்
கறுவிழி என்பதால்
என்னை கண்ணீர்
சிந்த வைக்கின்றாயா?

நொடிக்கு நூறு முறை இறப்பேன்
என் மரணம் உன் மடியில் என்றால் ….
இறந்த மறு நொடியில் பிறப்பேன்
உன் அன்பு கிடைக்கும் என்றால் …..

உன்னை நேசிப்பதற்காகவே
நான் காதல் கொண்டேன்
உன்னை வெறுப்பதற்காக அல்ல…
நீ பிரிந்து சென்றாலும்
உன் நினைவுகளை நேசிப்பேன்
உன் மேல் நான் கொண்ட காதல் வா

pain death quotes in tamil Valthukkal.in
pain death quotes in tamil Valthukkal.in

உன் செயல்கள் எத்தனையோ முறை
என்னை அழ வைத்தாலும்
என் இதயம் உன்னை ஒரு போதும்
வெறுத்ததும் இல்லை உன்னை
விலகி செல்ல நினைக்கவும் இல்லை..!

தொலைந்த போன
என் சிரிப்பை தேடுகிறேன்
காணவில்லை என்று,
நீ பிரிந்த மறு நொடியே
அது தொலைந்து போனது
கூட தெரியாதவனாய்…

பூவிலிருந்து மணத்தை
பிரிப்பது சாத்தியமெனில்
என்னிடமிருந்து உன் நினைவுகளைப்
பிரிப்பதும் சாத்தியமே….

உன்னை விரும்பிய அந்த நொடி
அழகாய் இருந்தது ஆனால்
இப்பொழுது ஒவ்வொரு நொடியும்
என்னை அழ வைக்கிறது !!!

sad quotes in tamil Valthukkal.in
sad quotes in tamil Valthukkal.in

காலங்கள் காத்திருப்பதில்லை..
ஆனால் உன்னை நேசிக்கும்,
உண்மையான இதயம்
உனக்காக நிச்சயம் காத்திருக்கும்..

மரணத்தின் பின்னும் மரிக்காத
உறவு நீ எனக்கு…

இறைவா..
எனக்குக் கல்லறை என்ற
ஒன்று இருக்கவே கூடாது..!
அவளின் கருவறையில்
என்னைப் புதைத்திடு..
பிள்ளையாகப் பிறக்கின்றேன்..
அப்பொழுதாவது என்னைக் கொஞ்சட்டும்..
கொஞ்சமாவது..!

உன்னை நினைக்கும் போதெல்லாம்
என் நினைவுகள் என்னிடம் இல்லை..
அசந்து தூங்கும் நேரம் கூட
அசந்துவிடுகிறேன் உன்னிடத்தில்..
வா வா அழகில் வறுமை இல்லாத
என் தேவதையே..
நீ சற்று என்னை பார்க்கும் போது
விட்டு விட்டு பொழியும்
மழையாய் நனைகின்றேன்..

… உன் அழகின் மறுபக்கம்
உன் கண்கள்..
மந்திரமாய் மந்திரிக்கும்
மாயாஜால கண்கள்..
என்னை மின்னலாய் தீண்டியே
மயக்கம் கொண்டேன் உன் இமைகளிலே..

.கண்ணீரிலே கவிதை எழுதுகிறேன்
தினமும்..
என் கண்ணீர் நிற்கும் வரை
என் கவிதை நிற்காமல் பொழியும்
உங்களுக்காக..!

வாத்தியங்களே இல்லாத இசையாய்
கொள்ளை சிரிப்பு..
நட்சத்திரங்களை
உடைத்து ஒட்டிய பற்கள்..
எரியும் நெருப்பை சுற்றிய
காற்றாய் அப்படி ஒரு கோபம்…

உன்னை நினைத்த நொடிகளில்
கவிதைகாரனாய் இருப்பேன்..
என்னை காதல்காரனாய் ஏற்றுக்கொள்
முழு நேர கவிதை புத்தகமாய்
உன்னை வளம் வருவேன்…!

நீ என்னை விட்டுச்சென்ற வேதனையை விட
நான் உன்னை மறக்க நினைக்கும்
வேதனையே என்னை தின்றுவிடும்…
காட்டில் புதைந்த மெழுகுவர்த்தியாய்
உன்னை என் இதயத்தில் ஏற்றினேன்..,
நீயோ அணையாமல்
என் இதயத்தை
மெல்ல மெல்ல உருக்குகின்றாய்…!
வலிக்கவில்லை ஆனால்..,
வழிந்தோடுகிறது என் காதல்…!

மேலும் படிக்க
VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

admin

Leave a Comment