கையோடு வளை ஓசையோ
காலோடு கொலுசோசையோ
விழியோடு மீன் ஆடலோ
இதழோடு புன்னகை பூ ஆடலோ
என் நினைவெல்லாம் ஆடும் உன் அழகு
விரலோடு சுரம்பாடும் வீணையின் நாதமோ
வெண்பனியோடு சுகம் தேடும் பூமலரோ
மலரோடு உறவாடும் மார்கழி குளிர் தென்றலோ
என் மனதோடு குறள் பாடும் உன் தமிழ்

கற்பனையின் தவிப்பு…
கற்பனையோடு காத்து இருக்கின்றேன் உன் முகம் காண…
பார்த்த பின்பு
அந்த கற்பனைக்கு உயிர் கொடுப்பாயோ என்றும் உன்னுடன் வாழ…
மலர்ந்த மலர்களில்
தேன் அருந்தும் வண்டு
வண்ண மலர்களுக்கு
நன்றி சொல்லி
ரீங்காரம் பாடும்
நான் கோப்பையில்
தேநீர் அருந்துவேன்
அருந்தியபடியே
கணினி முன் அமர்ந்து
கவிதை எழுதுவேன்
தேநீருடன் கவிதை
விருந்து தந்திடுவேன்
உங்களுக்கு
பாடிப் பாடி நானும்
படிக்கும் உள்ளங்களுக்கு
நன்றி சொல்வேன்
நான் ஒரு கவிதைத் தேனீ
நான் ஒரு தேநீர் விரும்பி
நான் தேடுவது
ஒரே ஒரு மலர்
விரும்புவது
அந்த மலரில்
ததும்பும்
அன்பு எனும் மது
நான் ஒரு
காதல் தேனீ

நீ பேச பழகிய அன்றே
“தமிழ் செம்மொழி”
ஆகிவிட்டது அதற்க்கு
ஏன் இன்று பாராட்டு
விழா நடத்துகிறார்கள் !!!
என் காதலன்!!!
காதலைத் தேடி அலைந்தேன்; என் உயிர் தோழனை மறந்து!!
என் தோழியே, அன்று நீ என் காதலி
என் தோழியே, அன்று நீ என் காதலி
என் தோழியே ,
அன்று நீ என் காதலி
இனியே என் வாழ்வில்
எனக்குண்டோர் நிம்மதி..
-நன்றி
சிறகொடிந்த ஊர்க்குருவி…
நீ சிரிக்க…….
நான் விழித்தேன்
பின்
ஊர் விழிக்க,
………. சிறை உனக்கு – இனி
சிறகுக ளெதற்கு????
குறிப்பு:
புரிகிறதா,
யாரிந்த ஊர்க்குருவி?
கலையிழந்த தேனருவி
விண்ணில் உள்ள சூரியன்,
என்னில் பட்ட போது,
மண்ணில் வீழ்ந்தாய்………
மதி கெட்ட மாந்தரும்,
மதி பெற்ற மாந்தரும்,
வேறு இலர் உன்னில்………
ஒளியோடு பிறவாய் நீ,
ஒளி நீங்கின்,
இருளில் ஒழிவாய் நீ………
உன்னில் பெண்ணின் இலாபம்………
பெண்ணின் நிழல் நிலம் படர ,
ஆணில் பிறக்காது எண்ணம்,
அவள் அழகு பற்றி………..

நரை முளைக்க,
நாடி தளர,
கடமை முடிய,
முதுமை பிறக்க,
பெற்றோர் உற்றோர் மற்றோர்,
எவரும் இலர் உன் போல்,
காலம் முழுதும் என்னுடன்………!!!!