தமிழரின் மிகப்பெரிய அடையாளமாக விளங்குவது தை மாதத்தில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகை பொங்கல். தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலுங்கானா, கேரளம், ஸ்ரீலங்கா, மற்றும் வெளிநாடுகளிலும் பொங்கலை மிகவும் சிறப்பாக கொண்டாடுகின்றன.
அப்படிப்பட்ட இந்த திருநாளை உங்களுடைய வாழ்த்துக்களை மற்றவர்களுக்கு தமிழ் மொழியில் தெரிவித்து நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உங்களை கொண்டாடுங்கள்.
1000 + சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் birthday wishes for sister in tamil
குட் நைட் வாழ்த்து கவிதைகள் good night quotes
பொங்கல் வாழ்த்து-pongal wishes in tamil
பழைய பொருட்களை தூக்கி எறிவது போல, நம் மனதில் இருக்கும் கோபம், பொறாமை போன்ற தீய எண்ணங்களை தீயிட்டுக் கொளுத்துவோம் இனிய போகி நல்வாழ்த்துக்கள்.

குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க. விவசாயம் பெறுக, செல்வம் பெருக, சிறந்த உறவுகள் அமைந்திட இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இந்த நாள் பிறந்திருக்கும் தை திருநாள் அன்று, உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் மறைய, மகிழ்ச்சியை கொண்டாட இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
கரும்பை போல் உங்களுடைய உறவும் உயரம் வளரவும், கரும்பை போல குடும்பங்கள் உறவு இனிப்பாக அமைந்திடவும், சூரிய பகவானின் அருள் உங்களுக்கு கிடைத்திடவும் இந்த இனிய நாளை வாழ்நாளில் மறந்திட முடியாத நாளாக அமைந்திட இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

செல்வம் பெருக, உறவுகள் தொடர, விவசாயம் செழிக்க , இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
உலை பொங்க, உள்ளம் பொங்க, வறுமை நீங்கி , உழவருக்கு பாராட்டும் தருணம் இது, உழவனுக்கு நன்றி, கதிரவனுக்கும் நன்றி, இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்.
புதிய பாதை உருவாகிட, புதிய நம்பிக்கை, புதிய வாழ்க்கையை தேடி வாழ்வில் வெற்றி பெற தை திருநாள் அன்று உற்சாகத்தை ஏற்படுத்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

உழவனுக்கு சிறந்த நாள், உலகம் போற்றும் நாள், கதிரவனுக்கு உகந்த நாள், தமிழருக்கு பிறந்தநாள். இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
வருகின்ற திருநாள், வளம் தரும் தை திருநாள், காலையில் சீறி பாயும் ஏற்ற நாள், வீடுகள் அனைத்தும் கோலங்களால் மலர்ந்திடும் ஏற்ற நாள் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.
பச்சரிசி வெல்லும், கலவை செய்து காளைகளுக்கு பொங்கல் இட்டு, கண்கண்ட தெய்வமாய் இருக்கும் காளைகளை வணங்கும் என் உழவனுக்கு இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

உலகம் தேடும் உணவுக்கு ஏற்றவனாக இருக்கும் விவசாயிக்கு, வாழ்நாளில் இந்த ஒரு நாள் தான் மிகச் சிறந்த நாளாக இருக்கும் இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
உறவுகள் பண்டிகைகளால் இணைந்து, மகிழ்ச்சியில் செழித்து, அடுத்த தலைமுறையிலும் விவசாயத்தை காக்க காளைகளுக்கு பூஜை செய்யும் என் மன்னனுக்கு இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

தித்திக்கும் திருநாளாம் பொங்கல், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
சேற்றில் வைக்காத கையும், சோற்றில் வைக்காத கையும் இல்லாமல் இந்த உலகம் இல்லை, இனிய உழவர் தின நல்வாழ்த்துக்கள்.
வயிறார உணவு உற்பத்தி செய்யும் என் மண் விவசாயிகளுக்கு இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.
சூரியனுக்கு உகந்த நாளாம், என் குல தமிழருக்கு ஏற்ற நாளாம், உறவுகள் செழித்தும் வளரும் நாளாம் இந்த தை திருநாள். இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.
