திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். அந்த திருமண நாளில் உங்களுடைய குடும்பத்தாரோ, உறவினரோ, நண்பரோ போன்றவருக்கு திருமணம் நடக்கும் பட்சத்தில் உங்களுடைய வாழ்த்து அவர்களை பல்லாண்டு காலம் வாழ வைக்கும். ஒருவரை நாம் வாழ்த்துவது ஒரு மனம் வேண்டும்.
அப்படி பிறந்தநாள் மட்டும் அல்லாமல் திருமண நாள் போன்ற முக்கியமான நாட்கள் ஒவ்வொரு மனிதருக்கும் அவர் வாழ்நாளில் வரும். அந்த வாழ்நாளில் அவர்கள் ஆசியோடு குடும்பம், மகிழ்ச்சி, விருப்பு வெறுப்பும் இன்றி சந்தோஷமாக வாழ மனமாற வாழ்த்துக்கள்.
கல்யாண வாழ்த்துக்கள் Thirumanam valthukkal
நீண்ட ஆயுளோடும், பேரன்போடு அக்னிஸ் ஆட்சியாக நடந்த திருமணம் நூறு வருடங்களுக்கு தாண்டியும் சிறப்போடும் மகிழ்ச்சியோடும் இருக்க இனிய திருமண வாழ்த்துக்கள்.
தாய் தந்தையை விட தன்னை நம்பி வந்த பெண்ணை கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள இனிய கல்யாண வாழ்த்துக்கள்.
இணைபிரியா தம்பதியாக 100 வருடங்கள் தாண்டியும் சந்தோஷமாக வாழ இனிய திருமண வாழ்த்துக்கள்.
இறைவனின் ஆசி பெற்று, பெரியோர்களின் அன்போடு, சொந்த பந்தங்களின் பாசத்தோடு பல்லாண்டு கால வாழ இனிய திருமண வாழ்த்துக்கள்.
நல்ல வாழ்க்கை, நல்ல துணை பேரின்பத்தோடு பல்லாண்டு வாழ்க இனிய திருமண வாழ்த்துக்கள்.

இரண்டு உள்ளங்களும் இணைந்து, வாழ்க்கை எனும் பயணத்தைத் தொடங்கி , இனிமையான வாழ்க்கையை மேற்கொள்ள எனது மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்.
இன்று போல் என்றும் உங்கள் வாழ்நாளில் மகிழ்ச்சியுடனும் ,அன்போடு , ஆசியோடும் இன்பமாய் வாழ்க இனிய திருமண வாழ்த்துக்கள்.
உங்களின் இரு முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியும், வாழ்க்கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் உள்ளங்களுக்கும் எனது இனிய திருமண வாழ்த்துக்கள்.
பிறப்புக்கும், இறப்புக்கும் இடையிலான காதல் பயணத்தில் இன்று முதல் உங்கள் வாழ்வில் உயிர்களாக இணைய ஆண்டாண்டு காலமாக வளர இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
குறையாத அன்பு, புரிந்து கொள்ளும் உறவும், விட்டுக் கொடுக்கும் உறவாய் இன்று முதல் வாழ்க்கை தொடங்கி பல்லாண்டு வாழ இனிய திருமண வாழ்த்துக்கள்.’

உங்கள் துணைவியின் நிழல் போல, எப்பொழுதும் துணைவிக்கு உதவியாகவும் அவள் கனவுக்கு ஏணியாகவும் குடும்பத்திற்கு தூணாகும் என் நண்பனுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.
இன்று கைகோர்க்கும் உங்களுடைய கரங்கள், நூறாண்டு காலம் இதேபோல வாழ இனிய திருமண வாழ்த்துக்கள்.
நீ யாரோ நான் யாரோ இருந்து இன்று நாமாக மாறிய உங்களுக்கு என் இனிய திருமண வாழ்த்துக்கள்.
சுகமோ துக்கமோ அதில் இரண்டு பேருக்கும் பங்கு உண்டு ,பிரிவென்றும் நிலை இல்லாமல் மகிழ்ச்சியை மட்டும் குறிக்கோளாக, வருங்காலத்தை எண்ணி வாழ்க்கையை தொடங்கும் என் தோழிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்.
நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், நிலம் இது போல இந்த உலகம் இல்லை, அதே போல் அன்பு, பாசம், விட்டுக் கொடுக்கும் குணம், இவை இல்லாமல் நீங்கள் எப்பொழுதும் இருக்கக் கூடாது இனிய திருமண வாழ்த்துக்கள்.

நிச்சயம் இல்லாத வாழ்க்கை இது, அந்த வாழ்க்கையில் அன்போடும் அறிவோடும் ஆண்டாண்டு வாழ்ந்திட இனிய திருமண வாழ்த்துக்கள்.
நாள் பார்த்து வந்துவிட்டு, உறவுகள் கூடி மகிழ்ந்து, பெரியோர்களின் ஆசைப்படி அன்போடு வாழ்த்தும் இனிய திருமண வாழ்த்துக்கள்.
தனித்தனியாக இருந்த இரண்டு மனங்கள் இன்று ஒன்றாக கூடி, அது நாளையாக வளரும் மரமாக உருவெடுத்து குடும்பமாக பூத்துக் குலுங்க எனது மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்.
கைகளால் மட்டும் சேர்த்துக் கொள்ளாமல், இரு மனங்களாலும் சேர்த்து மஞ்சள் கயிறால் கட்டப்பட்ட தாலி இரு உள்ளங்களுக்கும் இருக்கும் வேலியாக நினைத்து இரண்டு உள்ளங்களும், வானெங்கும் வளர இனிய திருமண வாழ்த்துக்கள்.
கருடமுருடாக இருந்த என் வாழ்க்கை எனும் பாதையை, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பாதியாக மாற்றிய உனக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்.
காதல் எனும் மூன்று எழுத்தாக மாறி வாழ்க்கை எனும் மூன்றெழுத்தாக உருவெடுத்து அன்பு எனும் மூன்றெழுத்தோடு அரவணைத்து இன்பமாய் வாழ இனிய திருமண வாழ்த்துக்கள்.
அடியே செல்லம், உன்னுடைய முகம் பார்த்து எனக்கு பேச முடியவில்லை. காரணம் ஏற்கனவே உன் கண்கள் என்னை சிறை அடைத்து விட்டது. அதிலிருந்து மீண்டு வெளி வராமல் பல காலமாக தவிக்கிறேன் உனக்கு என்னுடைய இனிய திருமண வாழ்த்துக்கள்.
Released Post