நிழலாய் உன்னுடன்… வாழ்நாள் முழுதும் ஒரு காதல் பயணம்.

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

By admin

Published on:

                                                                                                                                                            என்ன உறவு என்று தெரியவில்லை, அப்படி  உறவுமுறை இருந்தால்தான் முறையான உறவு என்றால் ,    உன் உறவு முறை போல் வேறந்த  உறவு முறையும் எனக்கு இல்லை இந்த உலகில் . 

 

பலமுறை கோபித்துக் கொண்டாலும், இனி அவ்வளவுதான் என்றாலும், அடுத்த காலைப்பொழுது எனது அலைபேசியில் அன்பை பொழிகிறது உன் குறுஞ்செய்தி.

 

பாசமோ, கோபமோ, பணமோ, காதலோ, நீ கொடுத்ததற்கு கை மாறாக, எத்தனை ஜென்மம் எடுக்க போகிறேனோ என்று தெரியவில்லை

 

பல உறவுகள் இருந்தாலும் நேரம் தவறாமல், காலம் தாழ்த்தாமல் , கோபம் கொண்ட தருவாயிலும் ஒரு குறையும் வைத்ததில்லை நீ சாப்டியா என்ற வார்த்தை.

 

நிஜத்தில் மட்டும்தான் நீ என் அருகில் இல்லை, மற்றபடி தினமும் உன்னிடம் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அலைபேசியில்.

 

முதலில் உன்னை சந்திக்கும் பொழுது, கட்டி அணைத்து அழுகைதான் தோன்றியது. ஆனால்  உன் பதற்றம் என்னை தடுமாற வைத்தது. பல கனவுகள் கண்டு வந்தேன் ஆனால் இயற்கை அதற்கு சம்பாதிக்கவில்லை, ஆனால் என்றோ ஒரு நாள் நான் எதிர்பார்த்ததை செய்ய தான் போகிறேன் உன் அன்புக்கு இணங்க.

 

நான் ஒன்றும் கவிஞன் அல்ல , ஆனால் உன்னை பற்றி  பேச தொடங்கினால் என்ன விட சிறந்த கவிஞனும் இல்லை .

 

என் குரல் வைத்தே என் மனம் அறிவாய்.  நான்  துவண்ட போதெல்லாம், தூணாய் நின்று , உன்னுடைய உற்சாகமே பலமுறை என்னை பல தடைகளை உடைக்க வைத்துள்ளது. யாருக்காகவோ தெரியாது ஆனால் உனக்காக கண்டிப்பா நான் ஜெயிப்பேன்.

 

எத்தனை கோடி ரூபாய்ல பரிசு கொடுத்தாலும், நீ கொடுத்த பரிசுக்கு ஈடாகாது.

 

யாருக்காகவும் எழுதிய கவிதை , ஒருவேளை ஜாதி என்ற வார்த்தை இல்லாமல் இருந்திருந்தால். எனக்கான கவிதையாக ஆகிருப்பாய்.

 

ஒருநாளும் என்னை தனிமையில் விட்டதில்லை, எனக்கான ஒரு உறவாய் , எனக்குள் ஒரு உறவாய் என்னவனுக்கான  உறவே நீ தானடி

 

 நட்பு நாடான சைனாவிற்கு நன்றி தெரிவிக்கிறேன், கொரோனா என்ற நோயை          நீங்கள் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால், இப்படி ஒரு தேவதை என்னாலும் கண்டுபிடித்து இருக்க முடியாது.

 

காமமோ காதலோ எனக்கான ஆசையை பலமுறை உன்னிடம் காட்டிவிட்டேன், ஒருநாளும் சலித்ததில்லை , சஞ்சலம் பட்டதுமில்லை என் அன்பின்கிடங்க.

 

ஒருவேளை காதலாக இருந்தாலும் , இந்த அளவிற்கு இருந்திருக்குமோ என்று தெரியவில்லை. தொலைதூரமாக இருந்தாலும் என் வாழ்வில் தொலைத்து விடக்கூடாத பொக்கிஷம் நீதான்.

 

 

Join WhatsApp Channel
More Wishes • Join Now
FREE
VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

admin

Leave a Comment

Join Channel