எனக்காக நீ சொந்தம் இல்லாமல் இருந்தாலும், ஏழு ஜென்மம் என்று நான் தட்டி நழுவாமல் இந்த ஜென்மமே உன்னுடன் உன் நினைவுடன் என்னவளால் எனக்கானவளால் வாழ ஆசைப்படுகிறேன். முடிந்தவரையில் இதை எழுத வேலையிலும் கண்கலங்காமல் மனம் தளராமலும் எழுத முயற்சி செய்கிறேன்.
ஏனோ தெரியவில்லை ஏன் இவ்வளவு நெருக்கம் என வேண்டாம் என ஒருபோது நினைத்ததில்லை , வேண்டிக்கிணங்க எதுவும் நடக்கப் போவதுமில்லை ஆனாலும் ஒரு இனம் புரியாத ஒரு உறவாய் இன்னும் ஒரு முப்பது ஆண்டுகள் இரு அது போதும்.
எத்தனை கோடி கொடுத்தாலும், அந்த இரண்டு நாட்கள் என் வாழ்நாளில் மீண்டும் கொண்டு வர முடியாத நினைவு, இருவராலும் எதிர்பார்க்க முடியாத தருணத்தை மீண்டும் ஒரு முறையாவது வேண்டுகிறது என் மனம். மூன்றாவது நாள் எப்பொழுது வரும் என.
நான் அப்படி என்ன செய்து விட்டேன் உனக்காக என்று பலமுறை நீ என்னை கேட்டாலும், வேற என்ன எனக்கு செய்ய வேண்டும் என எப்படி நான் உனக்கு புரிய வைப்பேன்.
சில நேரங்களில் எனக்கு வெட்கமாக இருக்கிறது, நான் எவ்வளவு கோழையாக இருந்தேன், ஐந்து வருடத்திற்கு முன்னாள்.
சில நேரங்களில் என்னால், எனக்கானவளாய் என்னவளாய் மட்டும் தான் என்னால் யோசிக்க முடிகிறது.
நான் உன்னிடம் மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறேன், என்னிடம் எப்பொழுதுமே எப்போதுமாய் இரு என.
என் வாழ்வில் தவிர்க்க முடியாத மேலும் தவிர்த்து இருக்கவே கூடாத, அதை நினைத்து தவியாய் தவித்து தவமாய் வேண்டிக் கொள்வது உன்னிடம் இருக்கும் அந்த காதலை தான்.
பல்லாயிரம் செலவு செய்த பிறந்தநாள் பரிசு வேண்டாம், உன் மடல் போதும் என்ற வார்த்தைக்கு எத்தனை கோடி செலவு செய்தாலும் ஈடாகாது.
எனக்குள்ளும் இப்படி ஒரு காதல் இருப்பதை கண்டுபிடித்து கொடுத்ததற்கு காலம் முழுவதும் உனக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.
மற்றவரை போல உன்னை என்னால் விட்டுவிட முடியாது, தொடவும் முடியாத, சொந்தம் கொண்டாடவும் தெரியாத , தினம் தினம் ஏங்கி நிற்கும் என் மனதிற்கு எப்படி ஆறுதல் சொல்வேன்,
ஒருவேளை நீ எனக்கானவளாய் வந்திருந்தால், சாதனை புத்தகத்தில் என் பெயர் இடம் பெற்று இருக்கும்.
உன்னால் பல நேரங்களில் முடியாத பொழுதும் நான் உன்னிடம் வேண்டிக் கொள்வது, “எப்பவுமே போல பேசுடி “
மிஸ் யூ பொண்டாட்டி ஐ லவ் யூ சோ மச். விஷ் யு ஹாப்பி பர்த்டே


