என்னவளுக்காக என்னவானால் எழுதிய கவிதை

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

By admin

Updated on:

ennavalukuana-mendum-oru-kavithai

ஏதோ ஒரு பதற்றம் இவ்வளவு ஆசையை கொடுத்த பிறகும்

அந்த ஆசையை மீண்டும் கொடுக்காமல் போய்விடுவியோ என்று மட்டும் தான்.

 

 உன்னை முதல் கண்ட நொடிப் பொழுது ஏக்கமாய் பார்த்த கண்களும், பதற்றத்துடன் பதறிய உன் மூச்சு காற்றும் இப்பொழுதும் என் நினைவில் நீங்காத தருணமாய் தினம் தினமும் நினைக்கத் தூண்டும்  தாரக மந்திரமாய் படித்துக் கொண்டிருக்கிறேன் இரவும் பகலமாய்.💕

 

ஏனோ என் கண்களும் சற்றென்று கலங்குகிறது , காரணம் தெரியாமல் அதை உன்னிடமே வந்து புலம்பி என்ன பயன்  அந்த காரணத்திற்கு காரணமாகவும், நான் தான் காரணம் என மருந்தாகவும் இருக்கும் உன்னை எப்படி நான் வெறுப்பேன்.❤️😍

 

எனக்கு திருமணம் தள்ளி போவதை எண்ணி, நான் உனக்காக வேண்டுகிறேன்  என  என் காதலி கிடைத்ததற்கு நான் எவ்வளவு பாக்கியம் செய்திருக்கிறேன்.❤️

 

ஒருவேளை என்னுடைய மனைவியாக இருந்தாலும், என் ஆசைக்காக அவள் இணங்குவாளா கேள்விதான்? ஆனால் என் ஆசையை என் வார்த்தைகளாய் உணர்ந்து உணர்ச்சிகளால்  வெளிப்படுத்தும் என்னவள் கிடைக்க எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும்.❤️

 

கற்பனையாக வாழ்வதற்கு போட்டி வைத்தால் ,இந்த உலகத்திலே முதல் போட்டியாளரும் வெற்றியாளரும் நானே . கற்பனையாக வாழ எவரேனும் அனுமதி உண்டோ?😍

 

பலமுறை அந்த ஒரு தருணத்தை மணிக்கணக்காகவும், நாள் கணக்காகவும் ஏன் வருடக் கணக்காகவும் பேசினாலும் ஆசை தீராத தருணமாய் நமக்கு அமைந்தது இந்த பிரபஞ்சமே ஏற்படுத்திய நிகழ்வு.😊

 

தாலியோ, மெட்டியோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் சத்தம் இல்லா மேலமுழங்க, உறவினர்கள்  இல்லா கூட்டம் கூட, கூட்டம் இல்லாத நண்பர்கள் சூழ,  பந்தி இல்லாமல் பரிமாற, இயற்கைக்கு சாட்சியாய் இருக்கும் அந்த இரு வார்த்தை போதும் . நம்மளும் தம்பதிகள் தான்.😥

 

Join WhatsApp Channel
More Wishes • Join Now
FREE
VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

admin

Leave a Comment

Join Channel